Posts

சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல்

Image
  ச ர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் என்ற சொற்கள் ஒன்றோடொன்று பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை ஒத்த பெயர்களாக இருக்கின்றன.  இப்போது கேள்வி என்னவென்றால், அவை உண்மையில் ஒன்றா?  நிச்சயமாக இல்லை.  எனவே சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியலுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளை அறிய வேண்டும். சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியலின் பொருள்: சர்வதேச உறவுகள் என்பது சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு செயற்பாட்டாளர்களின் (அரசு மற்றும் அரசு சாராத செயற்பாட்டாளர்கள்) தொடர்புகளைப் பற்றிய ஆய்வு ஆகும். சர்வதேச அரசியலை சர்வதேச மட்டத்தில் உள்ள மோதல்கள் மற்றும் சர்ச்சைகள் மற்றும் அவற்றின் தீர்மானத்தை உள்ளடக்கிய சர்வதேச உறவுகளின் அந்த அம்சங்களைப் பற்றிய ஒரு ஆய்வாக வரையறுக்கப்படுகிறது. எச்.ஜே. மோர்கந்தோவின் கூற்றுப்படி, “சர்வதேச அரசியலில் அரசியல் உறவுகள் மற்றும் நாடுகளிடையே சமாதான பிரச்சினைகள் பற்றிய பகுப்பாய்வு அடங்கும்.  மேலும், அவர்  "இது நாடுகளிடையே அதிகாரத்திற்கான போராட்டம் மற்றும் பயன்பாடு ஆகும்." ...

வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம்

Image
  வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவம்  அறிமுகம்.  சர்வதேச அரசியல் பரப்பில் அரசுகள் மற்றைய அரசுகளுடன் உறவினை மேற்கொள்ளும் போது வெளிநாட்டுக் கொள்கை மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. இவ் வெளிநாட்டுக் கொள்கை இன்றி எந்தவொரு அரசும் சர்வதேச மட்டத்தில் இயங்க முடியாது. இவ்வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அரசுகள் தாம் எதிர்பார்ப்பவற்றை அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் ஊடாக அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றது. இதன் போது அரசுகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் என்பது அரசியல், பொருளாதார, இராணுவ, வர்த்தக, கலாசார அடிப்படையிலானதாக இருக்கலாம்.  சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப் பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும்  உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் எதிர்பார்ப்பானது நாடு...

யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).

Image
யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).  இலங்கை ஆரம்ப காலத்திலிருந்து சீனாவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. இதனால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே இன்றுவரை நெருக்கமான உறவு இடம்பெற்று வருவதைக் காணலாம். அந்த வகையில்  ஆரம்ப காலத்தில் இலங்கை - சீனாவுக்கு இடையே உறவுகள் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும். 1948-1956 காலப்பகுதி சுதந்திரத்தினை அடுத்து எட்டு வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேலைத்தேய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இக்காலப்பகுதியில் பிரதமர்களாக இருந்த சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவ ஆகியோர் இந்த கொள்கையினை பின்பற்றினர். கம்யூனிசத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தல், புதிதாக இலங்கையில் உருவாக்கிய பாராளுமன்ற  ஸ்தாபனங்களை கம்யூனிச அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் என்ற அம்சங்களே  ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகித்தது.  கம்யூனிஸ்டுகளுடனோ, கம்யூனிச நாடுகளுடனோ எத்தகைய தொடர்புகளையும் கொள்ள மறுப்பதே அக்காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி...

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள்

Image
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள் அறிமுகம் இன்று முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்களில் ஒன்று வெளிநாட்டுக் கொள்கை ஆகும்.  வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை எனக் கூறப்படுகிறது.  ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது  தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக் கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும், அதன் நெறியாள்கைகளையும் அரசுகளின் இறைமை, அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை, ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் என்பவைகள் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையினை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தேசிய நலன் ஆகும். தேசிய நலன் என்பது பின்வரும் மூன்று அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி உலக ஒழுங்கமைப்பு வெளி...

பெண்களின் அரசியல் பங்குபற்றலும், அதற்கான தேவைப்பாடும்.

Image
பெண்களின் அரசியல் பங்குபற்றலுக்கான தேவை இன்று அதிகம் உள்ளது. அதனால் அது பற்றிய கலந்துரையாடல் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, அவற்றினை சரி செய்ய வேண்டும். அதனால் பெண்கள் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம், மாகாண சபையில் அதிகரிக்க வேண்டும். 52% பெண்கள் உள்ளனர். ஆயினும் 6% பிரதிநிதித்துவம் இலங்கையில் தாண்டவில்லை. தென்னாசிய நாடுகளிலே மிக குறைந்த அளவில் அரசியல் பிரதிநிதித்துவம் காணப்படும் நாடு இலங்கை ஆகும். அதற்காக தீர்வை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.  நன்றி: சிலம்பு இணைய இதழ் ஆய்வு கட்டுரையை பார்வையிட: https://drive.google.com/file/d/1SY8xC0hPM9CAO46p92cyrB7ptOojh-mR/?usp=drivesdk தொகுப்பு: Sivam vithurshan.  Special in political science(Reading)-University of Peradeniya. certificate and Dip in human rights, Dip in Information technology, Dip in HRM (R), Batticaloa Viluthu non governmental Organisation youth secretary.     

தகவல் உரிமைச் சட்டம்

இலங்கையில் தகவல் உரிமைச் சட்டம் கட்டுரை: தகவல் உரிமை சட்டம்  இலங்கையில் தகவல் உரிமைச் சட்ட வரலாறு.  சர்வதேசத்தில் தகவல் உரிமை சட்டம்.  Download: https://drive.google.com/file/d/11mfESJjpGY-gHlDWfININvq8ddfLZZQ3/view?usp=drivesdk தொகுப்பு: சிவம் விதுர்ஷன்.  அரசியல் விஞ்ஞானத்துறை  பேராதனைப் பல்கலைக்கழகம். 

அரசியல் விஞ்ஞான மாதிரி இறுதி வினாத்தாள் மற்றும் விடைகள்.

Image
அரசியல் விஞ்ஞான மாதிரி இறுதி வினாத்தாள் மற்றும் விடைகள்.  வினாத்தாள்: https://drive.google.com/file/d/10IHuELblOVefgeq4VX1I9TLod2IL8qhB/view?usp=drivesdk விடைகள்: பகுதி-01 Mcq.  https://drive.google.com/file/d/107bqUIDNk4DosAu6TMijONvQomgE8_cs/view?usp=drivesdk பகுதி 1  Structure Answers.  https://drive.google.com/file/d/10DWGRneQqGbGqkLdXb53A-olx1Vp74PL/view?usp=drivesdk அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுங்கள்.  தொகுப்பு: சிவம் விதுர்ஷன்  அரசியல் விஞ்ஞானத்துறை (Reading).  பேராதனைப் பல்கலைக்கழகம்

20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும்.

Image
20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும். இலங்கையின் அரசியலமைப்பின்  20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதன் சாதக பாதகத் தன்மைகள் அலசி ஆராயப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒப்பிட்டு ஆராய்வதே சிறந்தது. அப்போதுதான் அதன் மாற்றங்களும், குறைகளையும் சரிவர அறிய முடியும். அந்தவகையில் சீர்திருத்த வரைபின் படி, 01. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 02. பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 03. அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டுள்ளது. 04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 05. தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 06. கணக்காய்வூ சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 07. தேசிய பொலிசு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 08. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 09. பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 11. ஆணைக்குழ...

சமஷ்டி அரசியலமைப்பு மாதிரி

Image
அறிமுகம்: ஒரு நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, பன்மைத்துவ இயல்பைப் பேணி, இன நல்லுறவையும் அமைதியையும் உறுதி செய்ய தெளிவான ஓர் அரசியலமைப்பு இன்றியமையாதது. சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்தி, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக, பொருளாதார, அபிவிருத்தியை ஒரு நாடு எட்ட வேண்டுமாயின், அதற்குச் சிறந்த முன்மாதிரியானதோர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய  தேச அரசுகள் (Nation States) அனைத்திலும் போல் தெளிவான அரசியல் சாசனம் நடைமுறையில் உள்ளது. இனம், மதம், மொழி, சாதி என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்காத பொருளாதாரக் கொள்கையைத் தெளிவாக வரையறை செய்யாத அரசியலமைப்பே மிகச் சிறந்தது என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். யாப்புக்கள் பல வகையிலும் காணப்படுகிறது. எனினும் அரசியல் யாப்பில் இறைமை அதிகாரத்தை பரவலாக்குவதன்/பகிர்வதன் மூலம் அரசியல் யாப்பை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1.சமஷ்டி அரசியலமைப்பு. 2.ஒற்றையாட்சி அரசியலமைப்பு 3. கூட்டாண்மை அரசியலமைப்பு 4. பாதி அரசியலமைப்பு இவ்வாறான வகையில் இன்று இறைமையை பகிர்வதனை அடி...