20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும். இலங்கையின் அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் சாதக பாதகத் தன்மைகள் அலசி ஆராயப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒப்பிட்டு ஆராய்வதே சிறந்தது. அப்போதுதான் அதன் மாற்றங்களும், குறைகளையும் சரிவர அறிய முடியும். அந்தவகையில் சீர்திருத்த வரைபின் படி, 01. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 02. பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 03. அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டுள்ளது. 04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 05. தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 06. கணக்காய்வூ சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது. 07. தேசிய பொலிசு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 08. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 09. பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 11. ஆணைக்குழ...