Posts

Showing posts from May, 2020

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி இலங்கையின் தேசிய அரசுப் பேரவை

தேசிய அரசுப் பேரவை (National State Assembly) என்பது இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் படி 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபை ஆகும். 1947 இல் உருவாக்கப்பட்ட இரு அங்க இலங்கை நாடாளுமன்றம் (இலங்கை பிரதிநிதிகள் சபை மற்றும் இலங்கை செனட் சபை) ஆகியவை இல்லாதொழிக்கப்பட்டு ஓரங்க முறைமையுடன் கூடிய தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு பதிலாக புதியதோர் அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது.  இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. 1972-1978 காலப்பகுதியில் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்று கூறப்பட்டது. ஓரங்க மன்றம்: சோல்பரி அரசியலமைப்பில் கீழ் (1947-1972) இலங்கையின் சட்டவாக்கத்துறையான...

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

அறிமுகம் மனித உரிமைகள் என்பது மனிதன் இயற்கையாக தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவைப்படும் அடிப்படை உரிமைகள் என அர்த்தப்படுத்தலாம். அதனால் எந்த ஒரு நாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் என்ற பெயரில் தனியான சட்டங்கள் இருப்பதைக் காண முடிவதில்லை. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின...

அடிப்படை உரிமைகளும், இலங்கையிலுள்ள ஏற்பாடுகளும்

Image
அனைவருக்கும் தேவையான விடயம் மனித உரிமை எண்ணக்கரு. அநீதியை எதிர்த்து நீதியை நிலை நாட்ட உரிமை மீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். அந்தவகையில் இலங்கையில் ஒம்புட்ஸ்மன் முறைமை பற்றிய தெளிவினை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அறிமுகம் இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கங்களிடம் உள்ளது. இதனால் சிவில் சேவை அமைப்பு விஸ்தரிக்கப்பட்டதுடன்,அதன் வேலைப்பழுவும் அதிகரித்தது. சிவில் சேவை அமைப்பில் ஏற்பட்ட விஸ்தரிப்பினால் சிவில் சேவையாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டது. அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்தி, மக்களுக்குத் தூய்மையான சேவையை வழங்குவதற்குப் புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் தேவைப்பட்டன. தூய்மையற்ற நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்யக...
1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி இலங்கையின் சனாதிபதி மே 22 1972 ல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கைத் தலைவராக சனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னைய சோல்பரி அரசியலமைப்பில் மகா தேசாதிபதியால் புரியப்பட்ட கடமைகளில் பெரும்பாலானவை சனாதிபதியால் புரியப்பட்டது. இங்கு முக்கிய மாற்றமாக சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகமாகக் காணப்பட்ட மகாதேசாதிபதி (இலங்கை) பிரித்தானிய முடியால் நியமிக்கப்படுவார்.  இதனால் அவர் பிரித்தானிய முடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருந்தார். ஆனால், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் சனாதிபதியை இலங்கைப் பிரதமர் நியமிப்பார். இவர் இலங்கைப் பிரதமருக்கும், மந்திரி சபைக்குப் பொறுப்புக் கூறக்கூடியவர். ஆகவேதான் சனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்பட்டார். சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள்: அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் 19, 20, 21ம் உறுப்புரைகள் குடியரசின் சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. 19ம் உறுப்புரை இலங்கைக் குடியரசின் சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். 20ம் உ...

நவீன அரசியல் கருத்தியல்களும் மதச்சார்பின்மை வாதமும்

Image
நவீன அரசியல் கருத்தியல்கள் இன்று உலகில் முக்கியம் பெறும் விடயமாக கருத்தியல்கள் உள்ளது. கருத்தியல் என்பது  "அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்"  என S.P.Huntington கூறுகிறார்.  ஆகவே சமூகத்தின் அரசியல் அறிவிற்கு, தனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுதியே அரசியல் கருத்தியல்களாகும். அரசியல் கோட்பாடுகள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். இந்தவகையில், மிகமுக்கியமான அரசியல் கருத்தியல்களாக  1.தாராண்மை வாதம் 2. முதலாளித்துவம் 3.மார்க்சிஸம். 4.பாஸிசம் 5. குடியரசு வாதம் 6.சமூக ஜனநாயக வாதம் 7.தேசிய வாதம் 8. மதசார்பின்மைவாதம், 9. பெண்ணிய வாதம் போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.  இதனால் கருத்தியல் அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போ...