தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தம். (1921-1924).
தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தம். (1921-1924). அறிமுகம்: தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. யாப்புருவாக்க பின்னணி: இலங்கையின் தேசிய காங்கிரஸ் அரசியல் யாப்பில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த வகையில், 1. சட்டசபையில் 05 பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். 2. பரந்த அடிப்படையில் ஆண்களுக்கும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெண்களுக்கும், வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். 3. ஐந்தில் ஒரு பங்கினர் சிறுபான்மையோராக இருத்தல் வேண்டும். தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்: 1.உத்தியோகப் பற்றற்றவர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அதிகமாக இருந்தமை. 2.தொடர்ந்தும் தேசாதிபதிக்கு மறுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 3. நிதிக்குழுவில் முதன் முதலாக இலங்கையர் ஒருவர் உள்வாங்கப்பட்டார் 4.சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற மூவர் சட்ட நிர்வாக சபையில் இடம்பெற்றனர். ஐரோப்பா ...