Posts

Showing posts from November, 2020

யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).

Image
யுத்த முடிவுக்குப் முன்னர் இலங்கை - சீனா உறவுகளின் வளர்ச்சி. (1948-2009).  இலங்கை ஆரம்ப காலத்திலிருந்து சீனாவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. இதனால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே இன்றுவரை நெருக்கமான உறவு இடம்பெற்று வருவதைக் காணலாம். அந்த வகையில்  ஆரம்ப காலத்தில் இலங்கை - சீனாவுக்கு இடையே உறவுகள் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும். 1948-1956 காலப்பகுதி சுதந்திரத்தினை அடுத்து எட்டு வருடங்களாக இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேலைத்தேய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இக்காலப்பகுதியில் பிரதமர்களாக இருந்த சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவ ஆகியோர் இந்த கொள்கையினை பின்பற்றினர். கம்யூனிசத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தல், புதிதாக இலங்கையில் உருவாக்கிய பாராளுமன்ற  ஸ்தாபனங்களை கம்யூனிச அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் என்ற அம்சங்களே  ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகித்தது.  கம்யூனிஸ்டுகளுடனோ, கம்யூனிச நாடுகளுடனோ எத்தகைய தொடர்புகளையும் கொள்ள மறுப்பதே அக்காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி...

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள்

Image
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை தீர்மானிக்கும் காரணிகள் அறிமுகம் இன்று முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்களில் ஒன்று வெளிநாட்டுக் கொள்கை ஆகும்.  வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு அரசு தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை எனக் கூறப்படுகிறது.  ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது  தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே ஏனைய அரசுகளுடன் ஒரு அரசு வைத்திருக்கக் கூடிய உறவினைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையையும், அதன் நெறியாள்கைகளையும் அரசுகளின் இறைமை, அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றமை, ஒரு அரசிற்கு இருக்கக்கூடிய தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் என்பவைகள் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையினை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தேசிய நலன் ஆகும். தேசிய நலன் என்பது பின்வரும் மூன்று அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி உலக ஒழுங்கமைப்பு வெளி...