சமஷ்டி அரசியலமைப்பு மாதிரி
அறிமுகம்: ஒரு நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, பன்மைத்துவ இயல்பைப் பேணி, இன நல்லுறவையும் அமைதியையும் உறுதி செய்ய தெளிவான ஓர் அரசியலமைப்பு இன்றியமையாதது. சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்தி, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக, பொருளாதார, அபிவிருத்தியை ஒரு நாடு எட்ட வேண்டுமாயின், அதற்குச் சிறந்த முன்மாதிரியானதோர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய தேச அரசுகள் (Nation States) அனைத்திலும் போல் தெளிவான அரசியல் சாசனம் நடைமுறையில் உள்ளது. இனம், மதம், மொழி, சாதி என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்காத பொருளாதாரக் கொள்கையைத் தெளிவாக வரையறை செய்யாத அரசியலமைப்பே மிகச் சிறந்தது என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். யாப்புக்கள் பல வகையிலும் காணப்படுகிறது. எனினும் அரசியல் யாப்பில் இறைமை அதிகாரத்தை பரவலாக்குவதன்/பகிர்வதன் மூலம் அரசியல் யாப்பை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1.சமஷ்டி அரசியலமைப்பு. 2.ஒற்றையாட்சி அரசியலமைப்பு 3. கூட்டாண்மை அரசியலமைப்பு 4. பாதி அரசியலமைப்பு இவ்வாறான வகையில் இன்று இறைமையை பகிர்வதனை அடி...