தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தம். (1921-1924).

அறிமுகம்:
தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே.
யாப்புருவாக்க பின்னணி:
இலங்கையின் தேசிய காங்கிரஸ் அரசியல் யாப்பில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த வகையில்,
1. சட்டசபையில் 05 பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும்.
2. பரந்த அடிப்படையில் ஆண்களுக்கும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெண்களுக்கும், வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.
3. ஐந்தில் ஒரு பங்கினர் சிறுபான்மையோராக இருத்தல் வேண்டும்.
தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1.உத்தியோகப் பற்றற்றவர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அதிகமாக இருந்தமை.
2.தொடர்ந்தும் தேசாதிபதிக்கு மறுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
3. நிதிக்குழுவில் முதன் முதலாக இலங்கையர் ஒருவர் உள்வாங்கப்பட்டார்
4.சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற மூவர் சட்ட நிர்வாக சபையில் இடம்பெற்றனர்.
ஐரோப்பா - 1
சிங்களவர் - 1
தமிழர் - 1
5. இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதேச ரீதியான தெரிவு அறிமுகப்படுத்தப்பட்டமை
6. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகியகால அரசியலமைப்பு (சுமார் இரண்டரை வருடங்கள்)
இந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட சட்ட சபையானது 1921.06.07 அன்று ஆரம்பமானது. இவ் யாப்பு மனிங் என்பவரால் தற்காலிகமாக உருவானது. இதனாலே இப்பெயருடன் யாப்பு உருவானது.
தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்த சட்ட சபை கட்டமைப்பு:
அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபை(சட்டசபை)யின் கட்டமைப்பு வருமாறு:
சட்டநிரூபண சபையின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 37 இதில்
1.உத்தியோக சார்பற்றோர் 23.
2.உத்தியோக சார்புள்ளோர் 14,
உத்தியோக சார்பற்ற அங்கத்தவர் எண்ணிக்கை, உத்தியோக சார்புள்ள அங்கத்தவர் எண்ணிக்கையை விட முதல் தடவையாக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 23 ஆகும். இதில் தெரிவின் மூலம் 16 பிரதிநிதிகளும் நியமனமாக 7 பிரதிநிதிகளும் இடம் பெற்றனர்.
தெரிவின் மூலம் - 16 பேர்
தெரிவு செய்யப்பட்ட 16 பிரதிநிதிகளுள் 11 பிரதிநிதிகள் பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதேச ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டோர் - 11
1.மேல் மாகாணம் - 3 பிரதிநிதிகள்
2.மத்திய மாகாணம் - 1 பிரதிநிதி
3.தென் மாகாணம் - 1 பிரதிநிதி
4.வட மாகாணம் - 1 பிரதிநிதி
5.வடமேல் மாகாணம் -1 பிரதிநிதி
6.கிழக்கு மாகாணம் - 1 பிரதிநிதி
7.வடமத்திய மாகாணம் - 1 பிரதிநிதி
8.ஊவா மாகாணம் - 1 பிரதிநிதி
9.சப்ரகமுவ மாகாணம் - 1 பிரதிநிதி
இன ரீதியான தெரிவுசெய்யப்பட்டோர் - 3 பேர்.
1.நாட்டுப்புற ஐரோப்பியர் - 1
2.நகர்ப்புற ஐரோப்பியர் - 1
3.பறங்கியர் - 1
சங்கங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டோர் -2
1.கீழ்நாட்டுப் பெருந்தோட்ட சங்கம் - 1
2.வர்த்தக சங்கப்பிரதிநிதி - 1
தேசாதிபதியால் நியமிக்கப்படுவோர் - 7
1.கண்டிச் சிங்களவர் - 2
2.இந்தியர் - 1
3.முஸ்லிம் - 1
4.சிறப்பு-3
நன்மைகள்.
1. சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை.
2. பிரதேசாவரிப் பிரதிநிதித்துவம அறிமுகப்படுத்தப்பட்டமையானது பிற்காலத்தில் தேர்தற் தொகுதிகள் அபிவிருத்தி அடையக் காரணமாக விளங்கின.
3. சங்கங்களுக்கு உறுப்புரிமை வழங்கியமையானது அவை சார்ந்த துறைகள் வளர உதவியாக அமைந்தன.
4.இந்தியர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கியமையானது அவர்களது அரசியல பங்குபற்றலுக்குத் துணை நின்றன.
5. சட்ட நிர்வாக சபையில் உத்தியோகப் பற்றற்றோருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டமையானது பிற்காலத்தில் மந்திரி சபை உருவாக வழிவகுத்தது.
தீமைகள்
1. பிரதேசவாரி பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட்டமையானது தமிழர்களை வெகுவாகப் பாதித்தது. தமிழர்களுக்கு இதற்கு முன்னர் சிங்களவர்களுக்கு ஓரளவு சமமான பிரதிநிதித்துவமாக இருந்தது. ஆனால் இவ் யாப்பின் பிரகாரம் சிங்களவர்களுக்கு 13 பிரதிநிதித்துவம் கிடைத்த அதே வேளை தமிழர்களுக்கு 03 பிரதிநிதித்துவம் மாத்திரமே கிடைத்தன.
2. உத்தியோகப் பற்றற்றோரின் அளவு சட்டசபையில் கூடினாலும் சட்டநிர்வாக விடயங்களில் தேசாதிபதி அதிகாரம் மிகுந்தவராகவே காணப்பட்டார்.
3.சட்ட நிரூபண சபைக்கு அதிகாரமோ பொறுப்போ வழங்கப்படவில்லை.
4.ஆளுநர் சட்ட சபையைக் கூட்டுதல் கலைத்தல் தொடர்பான அதிகாரம் மிக்கவராக இருந்தமை.
முடிவுரை:
மிக குறுகிய காலத்தில் செயற்பட்ட சீர்திருத்தம் சில குறைபாடுகளை கொண்டதுடன், கோரிக்கைகளும் அதிகரித்து வந்தது. இதனால் யாப்பு மாற்றப்பட்டு 1924 இல் புதிய யாப்பு கொண்டு வரப்பட்டது. இதனால் இவ் யாப்பு செயல் இழந்து போக மனிங் டிவன்ஷயர் அரசியல் சீர்திருத்தம் உருவானது.
தொகுப்பு:
Sivam vithurshan,
Special in political science(Reading).
University of Peradeniya.
உசாத்துணை நூல்கள்:
1. அம்பலவாணர் சிவராஜா (2006),"இலங்கை அரசியல்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு, p-31-33.
2. தமிழ்வின், இலங்கை அரசியல் யாப்பு வரலாற்றுச் சுருக்கம்,(கட்டுரை),
web: https://www.google.com/amp/s/www.tamilwin.com/education/ 01/119592/amp (Accessed 2016 October 2).
3.யோதிலிங்கம், சி. அ,(2004),"இலங்கையின் அரசியல் யாப்புகள்", குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
4. Cooray, L. J. M(1984)," constitutional government in Sri Lanka, Colombo :Lake House investment Ltd.
5. Jayasekara, P. V. J, "Confrontations with Colonialism: Resistance, Revivalism and Reform under British Rule in Sri Lanka 1796- 1920"-Volume-1.

Comments
Post a Comment