20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும்.
20வது திருத்தமும், அதன் முக்கிய அம்சங்களும்.
இலங்கையின் அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் சாதக பாதகத் தன்மைகள் அலசி ஆராயப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒப்பிட்டு ஆராய்வதே சிறந்தது. அப்போதுதான் அதன் மாற்றங்களும், குறைகளையும் சரிவர அறிய முடியும்.
அந்தவகையில் சீர்திருத்த வரைபின் படி,
01. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
02. பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
03. அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டுள்ளது.
04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.
05. தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.
06. கணக்காய்வூ சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.
07. தேசிய பொலிசு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
08. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
09. பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
11. ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை பாதிக்கப்படுகின்றது.
12. சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான கால எல்லை ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
13. பொதுமக்களுக்கு அறிவித்தல் இன்றி அவசர சட்ட மூலங்களை ஆக்குவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
14. பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி பொதுசன அபிப்பிராயம் கோர முடியும்.
15. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான வயதெல்லை 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
16. இரட்டை பிராஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்லலாம்.
17. தேர்தல் ஆணைக்குழு தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்தலாம்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள்.
ஜனாதிபதிக்கு இருந்த பின்வரும் கடப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
01. அரசியலமைப்பு மதிக்கப்பட்டு போற்றப்படுதலை உறுதிப்படுத்தல்.
02. தேசிய நல்லினக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்.
03. அரசியலமைப்பு பேரவை மற்றும் ஏஐஐஅ என்னும் அத்தியாயத்தில் குறிப்பீடு செய்யப்படும் நிறுவனங்களின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்தலும் வசதியளித்தலும்.
04. தேர்தல் ஆணைக்குழுவின் மதியூரையின் மீது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களும் மக்கள் தீர்ப்பும் நடைபெறுவதற்கான உகந்த நிபந்தனைகள் உருவாக்கப்படுதலை உறுதிசெய்தல்.
05. ஜனாதிபதி தன்னுடைய அதிகாரம், கடமை, செய்றபாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
06. ஜனாதிபதிக்கு எதிராக எவ்வித வழக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
07. ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைக்கூட தாக்கல் செய்ய முடியாது.
ஜனாதிபதிக்கு பின்வரும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
01. பாராளுமன்றத்தை எந்நேரத்தலும் கலைப்பதற்கான அதிகாரம். ஆயினும், ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்ட பாராளுமன்றத்தினை ஒரு வருடம் முடிவூறும் வரை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது.
02. ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வைத்திருக்க முடியும்.
03. அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஜனாதிபதிக்கு மட்டுப்பாடு கிடையாது.
04. பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கலாம் பதவி நீக்கம் செய்யலாம்.
05. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினை ஜனாதிபதி நியமிக்கலாம்.
06. தேர்தல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கலாம். பதவி நீக்கம் செய்யலாம்.
07. தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றிய ஒருவர் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
08. நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்களை நியமிக்கலாம். பதவி நீக்கம் செய்யலாம்.
09. நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது முதல் நிலை நியாயாதிக்க நீதிமன்றங்களில் கடமையாற்றிய அனுபவத்தினை பெற்ற நீதியரசரை நியமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
10. பொலிசு ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கலாம். பதவி நீக்கம் செய்யலாம்.
11. பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
பாராளுமன்ற பேரவை
01. இது 05 அங்கத்தவர்களை கொண்டது. அவர்கள்
1. பிரதமர்
2. சபாநாயகர்
3. எதிர்க்கட்சித் தலைவர்
4. பிரதமரினால் முன்மொழியப்படுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
5. எதிர்க்கட்சித் தலைவரினால் முன்மொழியப்படுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
இவர்களுள் 4, 5ம் நபர்கள் 1ம், 2ம், 3ம் நபர்கள் சார்ந்த சமூகங்கள் அல்லாத சமூகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.
பாராளுமன்ற பேரவையின் கடமை
ஜனாதிபதியினால் பதிவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள ஆட்களும் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுகின்ற ஆட்களும் தொடர்பான அவதானங்களை கோருகின்ற பொழுது அதற்கான அவதானங்களை சமர்ப்பிப்பது மாத்திரமே ஆகும். குறித்த அவதானங்கள் ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்கப்படவில்லையானால் ஜனாதிபதி நியமனத்தினை மேற்கொள்ளலாம்.
பதவிக்காலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலமாகும்.
பிரதமரினாலும் எதிர்க்கட்சித தலைவரினாலும் நியமிக்கபடும் நபர்கள் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டு வேறு நபர்களை நியமிக்கக் கோரலாம்.
அமைச்சரவை
19ம் திருத்தத்திற்கு முன்னரான நிலைக்கு மீளக் கொண்டு வரப்பட்டுள்ள.
குறிப்புகள்:
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் :
முக்கிய விடயங்கள்(சுருக்கமாக).
1. புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் ஜனாதிபதியினால் எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.
2. எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியும்.
3.ஜனாதிபதி எந்த அமைச்சையும் தன் வசம் வைத்திருக்கலாம்.
4.சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள், தலைவர்களை நேரடியாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம்.
5.ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக குறைப்பு.
6. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்க முடியும்.
7. நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம்
ஜனாதிபதிக்கு.
8.ஜனாதிபதி, காலத்திற்கு காலம், பிரகடனத்தின் மூலம் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுக்கலாம், அமர்வை நிறுத்தவும், நாடாளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் உண்டு
9. 10 பேரைக் கொண்ட அரசியல் அமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை. (பேரவையில் 5 அங்கத்தவர்கள் மாத்திரமே)
10. பாராளுமன்ற பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகள் இல்லை.
11. பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைப்பு.
12. இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும்.
18,19,20 ஒப்பீடு.
20ம் அரசியலமைப்புத் திருத்தத்தின் முக்கியமான சில அம்சங்கள்
1. ஜனாதிபதி அமைச்சர்களை சுய விருப்பில் நியமிக்கலாம்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் பிரதமரின் ஆலோசனை முக்கியம்)
2. ஜனாதிபதி விரும்பியபோது பிரதமரை பதவி நீக்க முடியும்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் முடியாது)
3. ஜனாதிபதி பாராளுமன்றத்தை 2-1/2 வருடத்தின் பின்னர் கலைக்கலாம்.
(1978 JR யாப்பில் ஒரு வருடத்தின் பின்னர்) (19 இல் 4-1/2 வருடத்தின் பின்னர்)
4. ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்க இரட்டை பிரஜைக்கு முடியாது என்ற விடயம் நீக்கம். (1978 யாப்பில் இரட்டைப் பிரஜை விடயம் இல்லை.
(19 இல் இரட்டைப் பிரஜை விடயம் அறிமுகம்)
5. ஜனாதிபதி சில உயர் பதவிகளுக்கான ஆட்களையும் குறிப்பிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களையும் தன் இஷ்டப்படி நியமிக்கலாம்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(17, 19 இல் இஷ்டப்படி முடியாது.
(18 இல் முடியும்)
இதற்கு ஜனாதிபதி பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பைப் பெற வேண்டுமாயினும் அதன் முடிவுக்குக் கட்டுப்பட தேவையில்லை. 18 இலும் இவ்வாறே. 17, 19 இல் அரசியலமைப்புப் பேரவையின் முடிவுக்கு ஜனாதிபதி கட்டுப்பட வேண்டும்.
6. அரசியலமைப்பு பேரவை, பாராளுமன்ற பேரவையாக மாற்றப்பட்டு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
(1978 JR யாப்பில் இவ்விரண்டும் இல்லை) (17, 19 இல் அரசியலமைப்புப் பேரவை)
(18 இல் பாராளுமன்றப் பேரவை)
7. பாதுகாப்பு, அனர்த்தம் தொடர்பாக மாத்திரம் அவசர சட்டம்மூலம் சமர்ப்பிக்கலாம்.
(1978 JR யாப்பில் இக்கட்டுப்பாடு இல்லை) (19 இல் அவசர சட்டமூல விடயம் நீக்கப்பட்டிருந்தது)
8. ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் முடியும்)
9. ஜனாதிபதி விரும்பிய அமைச்சுக்களை வைத்திருக்கலாம்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் நீக்கம்)
மைத்திரிக்கு மாத்திரம் குறித்த 3 அமைச்சுக்களை வைத்திருக்க யாப்பு அனுமதித்தது.
10. பாராளுமன்ற சட்டமூலங்கள் ஒரு வாரத்தின் முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் 2 வாரங்களின் முன்னர்)
11. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை 30.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் 35 வயது)
12. பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலத்தை ஜனாதிபதி மக்கள் தீர்ப்பில் சட்டமாக்கலாம்.
(1978 JR யாப்பில் உள்ளது)
(19 இல் நீக்கம்)
13. ஜனாதிபதிக்கான 4 கடமைகளில் 3 நீக்கம். நீதி நியாயமான தேர்தலை நடத்தும் கடமை உள்ளது.
(1978 JR யாப்பில் கடமைகள் இல்லை)
(19 இல் அறிமுகம்)
—--------------------------
20 இல் நீக்கப்படாத 19 இன் அம்சங்கள்
1. தேர்தல்களை நீதி, நியாயமாக நடத்த ஜனாதிபதி பொறுப்பானவர். (19 இல் அறிமுகம்)
(1978 JR யாப்பில் இல்லை)
2. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள். (19 இல் அறிமுகம்)
(1978 JR யாப்பில் 6 வருடங்கள்)
3. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 5 வருடங்கள். (19 இல் அறிமுகம்)
(1978 JR யாப்பில் 6 வருடங்கள்)
4. ஜனாதிபதி 2 தடவைகள் மாத்திரமே போட்டியிடலாம். (18 இல் நீக்கம், 19 இல் உள்ளது)
(1978 JR யாப்பில் உள்ளது)
5. அமைச்சரவை அமைச்சர்கள் 30, ஏனைய அமைச்சர்கள் 40. (19 இல் அறிமுகம்)
(1978 JR யாப்பில் இக்கட்டுப்பாடு இல்லை )
6. தகவல் அறியும் உரிமை (19 இல் அறிமுகம்)
(1978 JR யாப்பில் இல்லை )
விரிவாக படிக்க:
20வது (அரசியலமைப்பு சீர்திருத்தம்) சட்ட வரைபு 3 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
English-
http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_E.pdf
Sinhala-
http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_S.pdf
Tamil-
http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_T.pdf
20ஆம் சீர்திருத்தத்திற்கு முன்னைய சீர்திருத்தங்கள் ஒரே பார்வையில்..
18 ஆம் சீர்திருத்தம்:
https://drive.google.com/file/d/1-TXPfxr3x3t4bG2KEOx7EiXEwPWO3Oip/view?usp=drivesdk
19 ஆம் சீர்திருத்தம்:
https://drive.google.com/file/d/1-_NoMZd-C-DlLOdgo5Umg3ftpgGWo4k6/view?usp=drivesdk
தமிழில் சீர்திருத்தங்களைப் ஒப்பிட்டு ஆராய்ந்த குறிப்பு:
13,17,18 & 19 சீர்திருத்தத்தின் ஒப்பீடு.
https://drive.google.com/file/d/1-Motw2zqLwcpQ5NNPVguQs14RQHcKFlR/view?usp=drivesdk
20ஆம் சீர்திருத்தம் தொடர்பில் வினா விடை தொகுப்பு:
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
https://drive.google.com/file/d/11U05SzshDgoD3GKOu8XgSt5he0BN6wC5/view?usp=drivesdk
தொகுப்பு:
சிவம் விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானத்துறை (Reading).
பேராதனைப் பல்கலைக்கழகம்.
References:
20 ஆம் திருத்த சட்டம், அரசாங்க அச்சு திணைக்களம், (Accessed:2020 August 28).
19 ஆம் சீர்திருத்த சட்டம், அரசாங்க அச்சு திணைக்களம், (Accessed:2010 September 7)
18 ஆம் சீர்திருத்த சட்டம். அரசாங்க அச்சு திணைக்களம், (Accessed: 2015 March 16).

Comments
Post a Comment